ஜகத்தினை அழிக்காமலேயே!

“தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்!” பெரிய பெரிய உணவகங்களுக்கு  சென்று உண்ணும் பொது சில சமயம் முண்டாசுக் கவிஞனின் இந்த கூவல் நினைவுக்கு வருவதுண்டு. நான் ஒருவன் சாப்பிடும் காசுக்கு பலரின் பசியை போக்கலாமே என்று. ஆனால் என்னை மாற்றிக்கொள்ளும் பக்குவம் இன்னமும் வரவில்லை.

இன்று காலை வேலை செய்ய மனமில்லாமல் இணையத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்த போது இந்த பதிவுகளை வாசிக்க நேரிட்டது. மிகவும் சாதாரணமான மனிதர்கள். ஆனால் தாங்கள் செய்யும் உணவுத் தொழிலை வியாபார நோக்குடனே அணுகாமல் பல எளியவரின் பசியையும் போக்குகிறார்கள். இவர்களின் கதைகள் வாழ்கையில் நம்பிக்கை கொள்ள வைக்கிறது.

ஈரோடு – ஒரு வேளை சாப்பாடு 1 ரூபாய்http://www.erodekathir.com/2010/10/blog-post.html

மதுரை – மதிய உணவு 6 ரூபாய்http://www.youtube.com/watch?v=ecD94vTmizw&NR=1 ; http://www.youtube.com/watch?v=6uKIpqBgTHE&feature=related

 சென்னை – சாப்பாடு 15 ரூபாய், கலவை சாதம் 6 ரூபாய்http://www.luckylookonline.com/2010/04/blog-post.html

ஜகத்தினை அழிக்கவில்லை. பசியை போக்குகிறார்கள் இவர்கள்!

 பி.கு.: தங்களின் CSR செயல்கள் பற்றி மார்தட்டிக் கொள்ளும் சில பெரிய பெரிய நிறுவனங்கள் இவர்களிடம் பாடம் கற்கலாம்!

Advertisements