நமக்கு நாமே!!

அண்மையில் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு மாநில அரசு திரைப்பட விருதுகளில் பல விருதுகள் கலைஞரின் திரைப்படமான ‘உளியின் ஓசை’க்கு அளிக்கப்பட்டது. இதற்கு முன் அண்ணாவின் நுற்றாண்டு விழா முன்னிட்டு தி.மு.க.  சில விருதுகளை நிறுவித்து தனக்கும் தன்னை சார்தொருக்குமே  கொடுதுக்க்கொண்டது. கலைஞர் ‘அண்ணா விருது’ என்று ஒன்றை நிறுவி தனக்கே கொடுத்துக்கொண்டார்!! இதை விமர்சித்து சிலர் இது கலைஞரின் புதிய ‘நமக்கு நாமே’ திட்டம் என்றனர்.

ஆனால் இது ஒன்றும் இவர்க்கு புதியதல்ல என்பது போல் பேசுகிறார் கவிஞர் கண்ணதாசன், தனது வனவாசத்தில்.

வனவாசம் கவிஞரின் சுயசரிதையின் முதல் பகுதி, அவரது அரசியல் பயணம் பற்றியது. இதில் 47 ஆம்  அத்தியாயம் ‘கணையாழியும் கசப்பும்’. இதில் தி.மு.க. சென்னை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பின் கடற்கரையில் நடந்த வெற்றி விழா பற்றி கூறுகிறார்.

“…வருணனைகளோடு ஒரு விஷயத்தை (அண்ணா) சொல்ல ஆரம்பித்தார். “நான் என் மனைவிக்கு நகை வாங்கக்கூட கடைக்குச் சென்றதில்லை. எனக்கென்றுகூட நான் நகைக்கடை ஏறியதில்லை. இன்று மதியம் வேகாத வெயில்லில் ஊரெங்கும் அலைந்து கடையெங்கும் தேடி வாங்கி வந்தேன் ஒரு கணையாழி; அந்தக் கணையாழியை இந்த வெற்றியை ஈட்டித்தந்த என் தம்பி கருணாநிதிக்கு அணிவிக்கிறேன்.” கூட்டத்தில் பெருத்த கையொலி. ‘கருணாநிதி வாழ்க!’ என்ற முழக்கம். அவன் (கண்ணதாசன் தன்னை அவன் என்றே சுயசரிதையில் குறிப்பிடுகிறார்) கூனிக் குறுகினான். பயன் கருத்த உழைப்பு, அரசியலில் எப்படி அலட்சியமாக ஒதுக்கப்படும் என்பதை அப்போதுதான் அவன் கண்டான். ..
……அவன் நேரே அவரிடம் போனான். “என்ன அண்ணா! இப்படிச் சதி செய்துவிட்டீர்கள்?” என்று நேருக்கு நேரே கேட்டான்.
“அட நீயும் ஒரு மோதிரம் வாங்கிக்கொடு. அடுத்த கூடத்தில் போட்டுவிடுகிறேன்” என்றார்.
“அப்படித்தான் கருணாநிதியும் வாங்கிக் கொடுத்தாரா?” என்று அவன் கேட்டான்.
“அட சும்மா இரு. அடுத்த தேர்தல் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.”

(வனவாசம், பக்கம் 283 , 284. )

இதில் எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் ஆங்கிலத்தில் ‘History  repeats  itself!’ என்று கூறுவர். அது தான் நினைவிக்கு வருகிறது!கவுண்டமணி டயலாக் ஒன்னும் நினைவிக்கு வருது!!”அரசியில இதெல்லாம் சாதாரணமப்பா!!”

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s