கந்தசாமி – போதும் சாமி!!

ஒரு பிடி சிவாஜி, ஒரு பிடி ரமணா என எடுத்துக்கொண்டு பிள்ளையாரின் தம்பியை பிடிக்க கிளம்பியிருக்கிறார் சுசி கணேசன்..ஆனால் பழமொழிக்கேர்ப்ப அவர் பிடித்து என்னவோ ஒரு குரங்கை!!

விரும்பிகிறேன், 5 ஸ்டார், திருட்டு பயலே போன்ற நேர்த்தியான படங்களை படைத்த அதே சுசி கணேசன் தான் இந்த படத்தை இயக்கினார் என்ற கேள்வி ஒரு புறம் என்றால், படத்தில் விக்ரம் என்ற நடிகனை எங்கு தேடினாலும் கிடைக்கவில்லை!பணத்தை வாரி இரைக்கும் தாணு போன்ற தயாரிப்பாளர் கிடைத்தவுடன் கதை, திரைக்கதை எல்லாம் என்னத்துக்கு என்று இருந்து விட்டனர் போலும்!

பாடல்கள் வேகமாக இருந்தாலும், சில பாடல்கள் கேட்க/பார்க்க சகிக்கவில்லை..உ.தா. மியாவ் மியாவ் பாடல், கிளைமாக்ஸ் பாடல்!! படத்தின் ஒரே ஆறுதல் விக்ரமின் கூல் லுக்சும், ஷ்ரியாவின் ஹேர் ஸ்டைலும்.

தனது மற்ற படங்களை போலவே ஒரு நல்ல சமுதாய சிந்தனையை கூற கிளம்பிய சுசி கணேசனை தடம் மாற்றியது என்ன என்ற கேள்வியே படம் பார்த்து திரும்பிய என்னிடம் இருந்தது!!

பி. கு : இந்த பதிவு தன்னை படத்திற்கு கூப்பிடவில்லை என்று கோபமாய் இருக்கும் ஒரு நண்பரின் கோபத்தை தணிக்கவும்,  படிப்பர்வகளுக்கு படத்தை பற்றிய ஒரு எச்சரிக்கையை இருக்கட்டும் என்ற நல்ல எண்ணத்தில் பதிந்தது 🙂

One thought on “கந்தசாமி – போதும் சாமி!!

  1. Somehow managed to read thru the whole thing. Used a Tamizh-tamizh-english dictionary to understand some words. By the way you should have added Naveen’s gem of a comment on how the money spent on producing this movie could have been put to better use( as suggested in the movie itself€) 🙂

Leave a comment