Random thoughts

Entries categorized as ‘Tamil blogs’

நமக்கு நாமே!!

October 8, 2009 · Leave a Comment

அண்மையில் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு மாநில அரசு திரைப்பட விருதுகளில் பல விருதுகள் கலைஞரின் திரைப்படமான ‘உளியின் ஓசை’க்கு அளிக்கப்பட்டது. இதற்கு முன் அண்ணாவின் நுற்றாண்டு விழா முன்னிட்டு தி.மு.க.  சில விருதுகளை நிறுவித்து தனக்கும் தன்னை சார்தொருக்குமே  கொடுதுக்க்கொண்டது. கலைஞர் ‘அண்ணா விருது’ என்று ஒன்றை நிறுவி தனக்கே கொடுத்துக்கொண்டார்!! இதை விமர்சித்து சிலர் இது கலைஞரின் புதிய ‘நமக்கு நாமே’ திட்டம் என்றனர்.

ஆனால் இது ஒன்றும் இவர்க்கு புதியதல்ல என்பது போல் பேசுகிறார் கவிஞர் கண்ணதாசன், தனது வனவாசத்தில்.

வனவாசம் கவிஞரின் சுயசரிதையின் முதல் பகுதி, அவரது அரசியல் பயணம் பற்றியது. இதில் 47 ஆம்  அத்தியாயம் ‘கணையாழியும் கசப்பும்’. இதில் தி.மு.க. சென்னை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பின் கடற்கரையில் நடந்த வெற்றி விழா பற்றி கூறுகிறார்.

“…வருணனைகளோடு ஒரு விஷயத்தை (அண்ணா) சொல்ல ஆரம்பித்தார். “நான் என் மனைவிக்கு நகை வாங்கக்கூட கடைக்குச் சென்றதில்லை. எனக்கென்றுகூட நான் நகைக்கடை ஏறியதில்லை. இன்று மதியம் வேகாத வெயில்லில் ஊரெங்கும் அலைந்து கடையெங்கும் தேடி வாங்கி வந்தேன் ஒரு கணையாழி; அந்தக் கணையாழியை இந்த வெற்றியை ஈட்டித்தந்த என் தம்பி கருணாநிதிக்கு அணிவிக்கிறேன்.” கூட்டத்தில் பெருத்த கையொலி. ‘கருணாநிதி வாழ்க!’ என்ற முழக்கம். அவன் (கண்ணதாசன் தன்னை அவன் என்றே சுயசரிதையில் குறிப்பிடுகிறார்) கூனிக் குறுகினான். பயன் கருத்த உழைப்பு, அரசியலில் எப்படி அலட்சியமாக ஒதுக்கப்படும் என்பதை அப்போதுதான் அவன் கண்டான். ..
……அவன் நேரே அவரிடம் போனான். “என்ன அண்ணா! இப்படிச் சதி செய்துவிட்டீர்கள்?” என்று நேருக்கு நேரே கேட்டான்.
“அட நீயும் ஒரு மோதிரம் வாங்கிக்கொடு. அடுத்த கூடத்தில் போட்டுவிடுகிறேன்” என்றார்.
“அப்படித்தான் கருணாநிதியும் வாங்கிக் கொடுத்தாரா?” என்று அவன் கேட்டான்.
“அட சும்மா இரு. அடுத்த தேர்தல் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.”

(வனவாசம், பக்கம் 283 , 284. )

இதில் எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் ஆங்கிலத்தில் ‘History  repeats  itself!’ என்று கூறுவர். அது தான் நினைவிக்கு வருகிறது!கவுண்டமணி டயலாக் ஒன்னும் நினைவிக்கு வருது!!”அரசியில இதெல்லாம் சாதாரணமப்பா!!”

Categories: Books · Politics · Tamil blogs

கந்தசாமி – போதும் சாமி!!

September 1, 2009 · 1 Comment

ஒரு பிடி சிவாஜி, ஒரு பிடி ரமணா என எடுத்துக்கொண்டு பிள்ளையாரின் தம்பியை பிடிக்க கிளம்பியிருக்கிறார் சுசி கணேசன்..ஆனால் பழமொழிக்கேர்ப்ப அவர் பிடித்து என்னவோ ஒரு குரங்கை!!

விரும்பிகிறேன், 5 ஸ்டார், திருட்டு பயலே போன்ற நேர்த்தியான படங்களை படைத்த அதே சுசி கணேசன் தான் இந்த படத்தை இயக்கினார் என்ற கேள்வி ஒரு புறம் என்றால், படத்தில் விக்ரம் என்ற நடிகனை எங்கு தேடினாலும் கிடைக்கவில்லை!பணத்தை வாரி இரைக்கும் தாணு போன்ற தயாரிப்பாளர் கிடைத்தவுடன் கதை, திரைக்கதை எல்லாம் என்னத்துக்கு என்று இருந்து விட்டனர் போலும்!

பாடல்கள் வேகமாக இருந்தாலும், சில பாடல்கள் கேட்க/பார்க்க சகிக்கவில்லை..உ.தா. மியாவ் மியாவ் பாடல், கிளைமாக்ஸ் பாடல்!! படத்தின் ஒரே ஆறுதல் விக்ரமின் கூல் லுக்சும், ஷ்ரியாவின் ஹேர் ஸ்டைலும்.

தனது மற்ற படங்களை போலவே ஒரு நல்ல சமுதாய சிந்தனையை கூற கிளம்பிய சுசி கணேசனை தடம் மாற்றியது என்ன என்ற கேள்வியே படம் பார்த்து திரும்பிய என்னிடம் இருந்தது!!

பி. கு : இந்த பதிவு தன்னை படத்திற்கு கூப்பிடவில்லை என்று கோபமாய் இருக்கும் ஒரு நண்பரின் கோபத்தை தணிக்கவும்,  படிப்பர்வகளுக்கு படத்தை பற்றிய ஒரு எச்சரிக்கையை இருக்கட்டும் என்ற நல்ல எண்ணத்தில் பதிந்தது :)

Categories: Film reviews · Tamil blogs

கடவுளை மற; மனிதனை நினை!

June 12, 2009 · Leave a Comment

http://idlyvadai.blogspot.com/2009/06/blog-post_12.html

Categories: Society · Tamil blogs

மார்கழியில் குளிச்சுப் பாரு..

December 17, 2007 · 1 Comment

“மார்கழியில் குளிச்சுப் பாரு..” is a song from Thangarbachhan’s new movie “ஓன்பது ரூபாய் நோட்டு”. Thangar has cinematized his novel of the same name here in this movie. It tracks the story of a farmer, Madhava Padaiyaachi, played with aplomb by Sathyaraj. I am yet to see the movie, but had the opporutunity to watch a couple of songs and watch some scenes on TV. It seems to be a good movie. I am especially happy for Sathyaraj who has rediscovered his versatality as a good actor and trying out different roles from Periyar to Madhava Padaiyaachi. My favorite on screen performance of Sathyaraj is that of ‘Balu thevar’ in ‘Vedham puthithu’. But Sathyaraj is not the subject of this blog. This blog is on one of the two songs in the movie that I had the opportunity to add. I liked the lyrics so much that I started searching for them on the net. As I could not find them, I have to do the honours.Here are the lyrics for you…

மார்கழியில் குளிச்சுப் பாரு

குளிறு பழகி போகும்

மாதவனாய் வாழ்ந்து பாரு

வறுமை பழகி போகும்

உப்பில்லாம குடிச்சுப் பாரு

கஞ்சி பழகி போகும்

பாயில்லாம படுத்துப் பாரு

தூக்கம் பழகி போகும்

வறுமையோட இருந்து பாரு

வாழ்வு பழகி போகும்

சந்தோசத்த வெறுத்து பாரு

சாவு பழகி போகும்

என்னோட சொத்தெல்லாம் தொலைச்சிபுட்டேன்

இப்ப என் பேரில் உலகத்தையே எழுதிகிட்டேன்

துறவிக்கே வீடு மனை ஏதுமில்ல

ஒரு குறுவிக்கு காசேதான் தேவையில்ல

சில்லுனு ஒரு காத்து

சித்தோட ஊத்து

பசிச்சா கஞ்சி

படுத்தா உரக்கம்

போதுமடா போதுமடா சாமி!!

நான் சொன்னாக்கா

வலமிடமா சுத்துமடா பூமி

காசு பணம்

சந்தோசம் தருவதில்ல

வைரக்கல்லுக்கு

அரிசியோட ருசியுமில்ல

போதும் எனும் மனசு போல

செல்வமில்ல

தன் பொண்டாட்டி போல

ஒரு தெய்வமில்ல

வேப்பமர நிழலு

விசிலடிக்கும் குயிலு

மாட்டு மணி சத்தம்

வயசான முத்தம்

போதுமடா போதுமடா சாமி!!

அட என்னப் போல

சுகமான ஆளிருந்தா காமி!!

மார்கழியில் குளிச்சுப் பாரு

குளிறு பழகி போகும்

மாதவனாய் வாழ்ந்து பாரு

வறுமை பழகி போகும்

 Do download this song and hear it. The lyrics are by Kaviperarasu and music by Bharathwaaj. Srinivas has lent his voice. Better still watch it on TV through Thangar’s lens!!

Categories: Music · Tamil blogs
Tagged: ,

காற்றில் வரும் கீதமே..

September 23, 2007 · 1 Comment

இரண்டு நாட்களாய் நான் கேட்டு, லயித்து கொண்டிருக்கும் பாடல். இசையின் மகத்துவத்தை பாராட்டும் அருமையான வரிகள். அந்த வரிகளுக்கு உயிருட்டும் இசைஞானியின் உன்னதமான இசை. இயக்குனர் ஃபாசிலின் நேர்த்தியான காட்சியமைப்பு. அனைத்தும் சேர்ந்து கொடுக்கும் உங்களுக்கு ஓர் அருமையான அனுபவம். இதோ அந்த பாடல்..உங்களுக்காக

Categories: Music · Tamil blogs
Tagged: ,